தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2025 7:26 PM IST (Updated: 25 Dec 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம் விரைவில் அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, கழகத்தின் சார்பில் பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன். ஆர்.பி. உதயகுமார் மேற்கண்ட குழுவினர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story