அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது


தினத்தந்தி 15 Dec 2024 10:46 AM IST (Updated: 15 Dec 2024 10:51 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளர்.

பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அத்துடன், டங்ஸ்டன் சுரங்க அனுமதியும், புயல், மழை நிவாரண உதவிகள் வழங்காதது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகள் குறித்து இன்றைய பொதுக்குழுவில் சில நிர்வாகிகள் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story