அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி


அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி
x

தி.மு.க வாக்குறுதியில் கூறிய எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுபயணத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். இன்று மேலூர் பஸ் நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் கொண்டுவந்தவர் மு.க.ஸ்டாலின், அதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது அ.தி.மு.க. அரசு.தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணி வெற்றி பெருமையாக பேசுகிறார் என்கிறார். அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கிறது. இப்போதாவது கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி இணக்கமான முடிவெடுத்து 152 அடியாக உயர்த்தும் நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.

ஆனால், தி.முகவினர் .இதையெல்லாம் செய்ய மாட்டார்கள். குடும்பத்துக்கான தேவையைத் தான் செய்வார்கள். இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். ரூ.12,100 கோடி தள்ளுபடி செய்தோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். அரசு என்றால் ஏழை மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். ஆனால் அ.தி.மு.க.வின் திட்டங்களை ரத்துசெய்வதுதான் தி.மு.க.அரசின் சாதனையாக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story