திருநெல்வேலியில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது

மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகள் காணவில்லை.
திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் சூப்பர்வைசராக கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 30.5.2025 அன்று காத்தாடி கம்பெனியில் வேலைகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்தபோது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகளை காணவில்லை.
இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), களக்குடியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் நேற்று (2.6.2025) கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.






