திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெகடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெகடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, தற்போது கூடங்குளம் பகுதியில் வசித்து வரும் ஆதர்ஸ்குமார் (வயது 24) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், ஆதர்ஸ்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com