என்னை பா.ஜனதா இயக்கவில்லை - கோவையில் செங்கோட்டையன் பேட்டி


என்னை பா.ஜனதா இயக்கவில்லை - கோவையில் செங்கோட்டையன் பேட்டி
x

நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது என செங்கோட்டையன் கூறினார்.

கோவை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். என்னை பா.ஜனதா இயக்கு வதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது. ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தது அவரது விருப்பம். எடப்பாடி பழனிசாமி யின் மகன், மைத்துனர் ஆகியோர் அ.தி.மு.க.வை இயக்கி வருகின்றனர். அவர்கள் எங்கிருந்து கட்சியை இயக்குகின்றனர் என்பது பற்றி எனக்கு தெரியும்.

எடப்பாடி குடும்பத்தில் மகன் தலையிடுகிறார். மைத்துனர் எல்லா பக்கமும் வருகிறார். மருமகன் தலையிடுகிறார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காரணமாக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் சிலருடன் பேசி வருகிறேன். அவர்கள் யார், யார் என்பது பற்றி நான் இப்போது குறிப்பிட விரும்பவில்லை. நான் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை வெளிப்படையாக சொன்னால், அது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story