பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்


பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 Jan 2025 9:45 PM IST (Updated: 5 Jan 2025 9:45 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை தமிழ்நாடு பா.ஜ.க. திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ், ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய தி.மு.க. அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகக் காவல்துறையும் தி.மு.க.வின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story