முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
x

கோப்புப்படம்

முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறினார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.

போலீசாரின் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story