சென்னை ஐகோர்ட்டு உள்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை ஐகோர்ட்டு உள்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 19 Sept 2025 12:40 PM IST (Updated: 19 Sept 2025 12:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இரண்டு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே, சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடந்து வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுங்கத்துறை தலைமை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பக்குதி

1 More update

Next Story