வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவனிடம் செல்போன் பறிப்பு - வாலிபர் கைது


வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவனிடம் செல்போன் பறிப்பு - வாலிபர் கைது
x

வேலை வாங்கி தருவதாக கூறி சிறுவனிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குமரி,

கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் குடும்ப வறுமை காரணமாக 17 வயது சிறுவன் ஒருவன் வேலை தேடி சின்னமுட்டம் துறைமுகத்துக்கு வந்துள்ளான்.

அப்போது அவனிடம் சார்லி செல்வ கார்த்தி (வயது 27) என்பவர் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர் சிறுவனிடம் வேலை வாங்கி தருவதாக கூறி செல்போனை வாங்கிவிட்டு மாயமாகிவிட்டார். இதுகுறித்து அந்த சிறுவன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தான்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இரணியலில் வைத்து செல்போனை பறித்து சென்ற சார்லி செல்வ கார்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story