சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்
திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயில், திருப்பதிக்கு பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருப்பதி செல்லும் முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வரை திருப்பதிக்கு பதிலாக திருச்சானூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து அரக்கோணம் வரும் பயணிகள் ரெயில் திருப்பதிக்கு பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும்.
திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் முன்பதிவில்லாத பயணிகள் ரெயில், திருப்பதிக்கு பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும். அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், திருப்பதிக்கு பதிலாக திருச்சானூர் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






