சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயில் 3 ஊர்களில் கூடுதலாக நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே

செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை சென்டிரலுக்கு 25-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில் (06122) இயக்கப்படுகிறது.
சென்னை,
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்டிரலில் இருந்து செங்கோட்டைக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரெயில் ஒன்று (வண்டி எண் 06121) வரும் 24-ந்தேதி முதல் புதன்கிழமைகளில் வாரந்தோறும் இயக்கப்படுகிறது.
அதேபோல், மறுமார்க்கத்தில், 25-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை சென்டிரலுக்கு சிறப்பு ரெயில் (06122) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் ஏற்கனவே, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக, சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.






