கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


தினத்தந்தி 1 Jan 2025 10:38 PM IST (Updated: 2 Jan 2025 3:13 PM IST)
t-max-icont-min-icon

அங்கு இருந்த பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

சென்னை,

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சூழலில் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்" என்று பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில், புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

1 More update

Next Story