ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
Published on

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மோந்தா புயல் காரணமாக கடலில் சீற்றம், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயலால் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் இன்று மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும்வரை நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com