திமுக எப்போதும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்றது கிடையாது - நயினார் நாகேந்திரன்

கடந்த முறை ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஏதோ அம்மா உடன் இருப்பது போல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை.
திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






