வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கைது

திருச்செந்தூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கைது
Published on

துத்துக்குடி மாவட்டம், திருச்செந்துர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த காமராஜ் மகன் சிவராஜன் (வயது 32), தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆவார். இவர் நகராட்சி கழிவறைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்துகிறார். இவரிடம் வேலை பார்த்த, சின்னதம்பி(39) என்பவர், சில நாட்களாக பணிக்கு வரவில்லையாம்.

இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற சிவராஜன், சின்னதம்பியை அவதுறாக பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சின்னதம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் திருச்செந்துர் காவல் நிலைய பேலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவராஜனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com