ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 20 Dec 2024 1:58 PM IST (Updated: 20 Dec 2024 2:04 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

கோவை,

கோவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் நேற்று கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகத்தோடு பணியாற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள். 2026 சட்டசபை தேர்தலில் 200 என்ற இலக்கை வைத்திருக்கிறோம். ஆனால் ஈரோட்டில் மேற்கொண்ட கள ஆய்வில் நான் உணர்ந்த உணர்வு என்னவென்றால் 200-ஐ தாண்டி விடும் என்று தோன்றுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும். ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து காங்கிரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஒரு கொடுமையான முடிவு; அது ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளக்கூடியது. ரால்குல் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "நடிகர்கள் அரசியல் வருகையை நல்லா பார்க்கிறேன்" என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

1 More update

Next Story