விதிமீறல் கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி


விதிமீறல் கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி
x

எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால் அபராதத்துடன் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

சென்னை,

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

அதில் முக்கியமாக சென்னையில் கட்டுமானப் பணிகள் ஏற்படக் கூடிய காற்று மாசை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதன்படி 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறலுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், 500 சதுர மீட்டருக்கு மேல் 20,000 சதுர மீட்டர் வரை பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல்களை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு, 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் எனவும், 15 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால், அபராதத்துடன் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

1 More update

Next Story