தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

பாஜக தேசிய தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
சென்னை
பாஜக தேசிய தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட பாஜக செயல் தலைவராக உள்ள நிதின் நபின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நிதின் நபினை தவிர வேறு யாரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் நாளை நடைபெறும் பாஜக தேசிய தலைவர் தேர்தலில் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். பாஜக தேசிய தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






