மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்


மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான  ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்
x

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

சென்னை,

சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், தற்போது இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறார்கள்.

ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், ஞானசேகரனை, சிறப்பு புலனாய்வு குழுவினரின் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே விசாரணையின்போது, ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை, உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஞானசேகரன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் அவர் வலிப்பு ஏற்பட்டதாக அவர் நாடகமாடியதும் அம்பலமானது. இதனையடுத்து உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story