கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை வடகிழக்கு பருவமழை மிரட்ட ஆரம்பித்துள்ளது.
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?
Published on

சென்னை,

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை வடகிழக்கு பருவமழை மிரட்ட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com