பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை - ஜெயக்குமார் பேட்டி


பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2025 2:26 PM IST (Updated: 6 Nov 2025 2:31 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டமானது சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான கூட்டத்திற்குப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பங்கேற்காதது ஏன்?முதல்-அமைச்சர் தலைமையில் தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஏன் வரவில்லை?

அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.கூட்டங்களுக்கான விதி அனைத்துக்கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை, அதை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமம் என்ற முறையில் விதிகளை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story