காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் வலுவிழந்த டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்ளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதைபோல கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில்நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com