விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன்

அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு பா.ஜனதாவே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன்
Published on

ஆவடி,

ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று மாலை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கோட்டையன் எந்த பின்னணியில் த.வெ.க.வில் இணைந்தார் என எனக்கு தெரியாது. ஆனால், தமிழக அரசியலில் நடக்கும் ஒவ்வொரு நகர்விலும் பா.ஜனதாவின் கைகள் உள்ளன. அதை யாரும் மறுக்க முடியாது.அ.தி.மு.க.வின் குழப்பான நிலைக்கும், விமர்சிக்கப்படும் நிலைக்கும் பா.ஜனதாவும் ஒரு காரணம் என அ.தி.மு.க.வினர் உணர்வார்கள் என நான் நம்புகிறேன். விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பது எனது விருப்பம். பாஜகவுடன் அவர் காட்டும் இணக்கம் அவருக்கு பயன் தராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com