ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் - அண்ணாமலை


ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் - அண்ணாமலை
x
தினத்தந்தி 24 Feb 2025 10:02 AM IST (Updated: 24 Feb 2025 10:03 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலனுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

சென்னை,

தமிழக அரசியலில் தனக்கென தனி இடம் பதித்த பெண் தலைவரான, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்தநிலையில் முன்னாள் முதல்-அமைச்சர்ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.

சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story