நகைக்கடன் மோசடி; சென்னை ஐகோர்ட்டு முன்பு இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்

ஐகோர்ட்டு வளாகம் முன்பு சுமார் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த நகைக்கடையில் வட்டியில்லா நகைக்கடன் தருவதாக கூறி ஏராளமான வாடிக்கையாளர்களிடம் பணமோசடி நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறி சென்னை ஐகோர்ட்டு வளாகம் முன்பு சுமார் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகும், குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டார்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது புகார் மனுக்களை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் கொடுப்பதற்கு போலீசார் வழிவகை செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






