காஞ்சிபுரம்: அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து - 2 இளைஞர்கள் பலி


காஞ்சிபுரம்: அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து - 2  இளைஞர்கள் பலி
x

அரசு பஸ் மோதி இரண்டு இளைஞர்கள் பலியான நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கீழோடி வாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து வீடு திரும்ப கொண்டிருந்த பொழுது காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தில் நோக்கி சென்ற அரசு பஸ் அதிவேகமாக இயக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் அஸ்வின் மற்றும் பிரதீப் விபத்தில் சிக்கினர்.

இந்த விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அஸ்வின் பலியானார், இச்சம்பம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் உடலையும் குறைந்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் பலியான நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ்கள் அதி வேகமாக இயக்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடனே இந்த சாலையில் பயணிப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்படுகிறது.

1 More update

Next Story