தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2025 6:52 PM IST (Updated: 7 July 2025 7:07 PM IST)
t-max-icont-min-icon

சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

தமிழக சட்டசபை தேர்தலை கருத்தி கொண்டு அதிமுக தற்போதே தேர்தல் பிரசார பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நிலையில், தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாலை பிரச்சார பயணத்திற்கு பிரத்யேக பேருந்தில் இபிஎஸ் புறப்பட்டார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக சாடினார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; தீய சக்தியான திமுக வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீடுகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அஜித்குமார் என்ற இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர் .

சாதாரண மக்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த, வாக்குகள் சிதறாமல் இருக்க அமைப்பது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரப்போகிறார்கள். தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவோம்; அதிமுக, பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். பாஜக உடன் திமுக கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

1 More update

Next Story