மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று ரத்து

கல்லார்-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையில் விழுந்துள்ளன.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சை பசேல் என காணப்படும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் குகைகள் வழியாக சென்று மலையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக மலை ரெயிலில் செல்கின்றனர்.
இதற்கிடையில், நீலகிரியில் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில், கல்லார்-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மரங்கள் வேரோடு சாய்ந்து ரெயில் பாதையில் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை இன்று(28-ந்தேதி) ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






