‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்' - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி


‘எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
x

மக்கள் பிரதிநிதியாக இருக்கிற தன்னிடம் ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சட்டநாத கரையாளர் 116-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், “செம்பரம்பாக்கம் ஏரியை என்னை கேட்டு திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருக்கிற என்னிடம் ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்.மக்கள் பிரதிநிதியிடம் சொல்வது கட்டாயம் இல்லை என்று ஒரு மூத்த, பொறுப்புள்ள அமைச்சர், மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் சொல்லலாமா?. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதும் வழிதலமேடு, திருமுடிவாக்கம் வழியாக அனகாபுத்தூர், பம்மல் வழியாக அந்த தண்ணீர் செல்லும். என்னிடம் சொன்னால் நான் அந்த பகுதி மக்களிடம் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி இருப்பேன்.

நாளைக்கு அந்த பகுதியில் வெள்ளம் வந்தால் யார் போய் நிற்பார்கள். நான் தானே போய் நிற்பேன். மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலம் இல்லை என்று அவர்கள் சொல்லட்டும். தண்ணீர் திறப்பு குறித்து தகவல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றால் நாங்கள் ஏன் மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். நாளைக்கே வேண்டுமானால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகிறேன். நாங்கள் எல்லாம் ரசித்த மூத்த அமைச்சர் இப்படி சொல்லிவிட்டாரே என்பது தான் வருத்தம்” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story