2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவர தயாராகிவிட்டது; அண்ணாமலை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக , பாஜக இடையே கூட்டணி உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் கூறியது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறுகையில், தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குதான் போட்டி என்று விஜய் கூறவில்லையென்றல் விஜய்யை யாரும் மதிக்கமாட்டார்கள். நடிகர், அரசியல் தலைவர் விஜய் போட்டி திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று கூறவில்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள். பின்னர் ஏன் அரசியல் கட்சி தொடங்கினீர்கள், மாநாடு நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புவர். அதனால் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் இதை கூறுவது இயல்புதான்.
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவர தயாராகிவிட்டது என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் மனதில் தேசிய ஜனநாயக கூட்டணி வந்துவிட்டது. அதனால் விஜய் கடுமையாக முயற்சி செய்யப்படும்.
என்றார்.






