21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது


21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 4 July 2025 1:47 PM IST (Updated: 4 July 2025 1:47 PM IST)
t-max-icont-min-icon

குட் டச், பேட் டச் குறித்து பள்ளியில் விளக்கம் கொடுக்கப்பட்டதை அடுத்து 21 மாணவிகள் புகார் அளித்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் , 50. இவர் அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர்.

அப்போது, குட் டச், பேட் டச் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செந்தில்குமார் மீது புகார் அளித்தனர்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். ஊட்டி ஊரக போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை நேற்றிரவு கைது செய்தனர்.

1 More update

Next Story