தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

தூத்துக்குடி மாநகர பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நாய் கடியால் ஏற்படும் அச்சமும், மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில் வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் மக்கள் வெளியில் செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மேலசண்முகபுரம், கீழசண்முகபுரம் உள்ளிட்ட மாநகரின் அனைத்து வார்டுகளிலும் அதிக நாய்கள் தொல்லை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 80-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும், தூத்துக்குடி மாநகர் முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com