தூத்துக்குடியில் பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் பலி


தூத்துக்குடியில் பஸ் மோதிய விபத்தில் போட்டோகிராபர் பலி
x

தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகே போட்டோகிராபர் ஒருவர் மோட்டார் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி முள்ளக்காடு பார்வதிபுரத்தைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் ராம்குமார் (வயது 50), போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் அருகே மோட்டார் பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்தார்.

அப்போது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story