விமான விபத்து - கவிஞர் வைரமுத்து வேதனை

கோப்புப்படம்
“எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து” என தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்
ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?
பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்...
தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்று
அவரவர் அன்னைமாரும்
கண்டறிய முடியாதே
அடையாளம் தெரியாத
சடலங்களை
புஷ்பக விமானம்
சிறகு கட்டிய
பாடையாகியது எங்ஙனம்?
கடைசி நிமிடத்தின்
கதறல் கேட்டிருந்தால்
தேவதைகள் இறந்திருக்கும்;
மரணம் முதன்முதலாய்
அழுதிருக்கும்
எரிந்த விமானம்
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டெழ முடியாது
நாம் மீண்டெழலாம்
தவறுகளிலிருந்து
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






