நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு: 3,969 பேர் எழுதினர்

நெல்லை மாநகரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெற்ற 6 மையங்களிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு இன்று (9.11.2025) நெல்லை மாநகரத்தில் 6 இடங்களில், ஆண் விண்ணப்பதாரர்கள் 3,299 பேருக்கும், பெண் விண்ணப்பதாரர்கள் 1,080 பேருக்கும் என மொத்தம் 4,379 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் மொத்தம் உள்ள 4,379 விண்ணப்பதாரர்களில் 3,969 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தேர்வு நடைபெற்ற 6 மையங்களிலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story






