கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

கோவை மாவட்டம் காரமடை, பொன்னிபாளையம், சக்தி நகரை சேர்ந்த ஒரு முதியவர் போக்சோ வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கோவை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
Published on

கோவை மாவட்டம் காரமடை, பொன்னிபாளையம், சக்தி நகரை சேர்ந்த ரங்கசாமி (வயது 64), போக்சோ வழக்கில் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை உடனடியாக சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com