எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ்: திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி

அன்புமணியின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை நாளை தொடங்கவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான இலச்சினை வெளியான நிலையில், முதற்கட்ட சுற்றுப்பயண விபரம் வெளியானது.
இந்த நிலையில், அன்புமணியின் சுற்றுப்பயணத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஜூலை 25ம் (நாளை) தேதியில் இருந்து நடைபயணம் போவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு டி.ஜி.பி., இடம், நடவடிக்கை எடுக்க கோரி, நாங்கள் புகார் மனு கொடுத்து இருக்கிறோம். இதனால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், போலீசார் அதிக கவனம் எடுத்துகொண்டு தடை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். " என்று தெரிவித்து இருந்தார்.
அன்புமணியின் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்திய நிலையில், திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் தொடங்கும் என அன்புமணி ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.






