இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் சாலைமறியல்


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் சாலைமறியல்
x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 மீனவர்களையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கச்சிமடம் அரசு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மீனவர்கள், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story