சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

செங்கல்பட்டு மாவட்டம், புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அழகேசன் (47 வயது) என்பவர் கடந்த 19.11.2025 அன்று புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சீருடையில் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.

தலைமைக் காவலர் அழகேசனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அழகேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com