அரசு ஊழியர்களை ஏமாற்றி 'ஊதிய' திட்டம் - அதிமுக எம்.பி., இன்பதுரை


அரசு ஊழியர்களை ஏமாற்றி ஊதிய திட்டம் - அதிமுக எம்.பி.,  இன்பதுரை
x

பொங்கலுக்கு ஐயாயிரம் கொடுக்க சொன்ன வாய் இப்போது மூவாயிரம் கொடுக்கிறது என அதிமுக எம்.பி., இன்பதுரை கூறியுள்ளார்.

சென்னை,

அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய வகை ஓய்வூதியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதன்மூலம் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்தநிலையில், அரசு ஊழியர்களை ஏமாற்றி 'ஊதிய' திட்டம் என அதிமுக எம்.பி., இன்பதுரை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

பொங்கலுக்கு ஐயாயிரம் கொடுக்க சொன்ன வாய் இப்போது மூவாயிரம் கொடுக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் வரும் என வாக்குறுதி தந்த நாவு அரசு ஊழியர்களின் வாக்குகளை அள்ளி ஆட்சிக்கு வந்த பின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, வட்டியை தந்து விட்டு,கொட்டி முழக்குகிறது! எத்தனை கோடி நாவு வைத்தாய் இறைவா என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story