சேலம் - சென்னை விமான நேரம் 26-ந்தேதி முதல் மாற்றம்

வருகிற 26-ந்தேதி முதல் குளிர்கால அட்டவணைப்படி விமானங்களை இயக்க உள்ளனர்.
சென்னை,
சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி முதல் குளிர்கால அட்டவணைப்படி விமானங்களை இயக்க உள்ளனர். அதில் ஏற்கெனவே உள்ள நேரத்தின்படி ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம்போல விமானங்கள் இயக்கப்படும். சேலம் - சென்னை விமான நேரம் மட்டும் மாற்றப்படு உள்ளது.
அதன்படி வருகிற 26-ந்தேதி முதல் மதியம் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 3.20 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 4.55 மணிக்கு 4.55 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை சேலத்தில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.
Related Tags :
Next Story






