சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பகுதி நேர ரத்து


சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பகுதி நேர ரத்து
x

சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சிக்னல் உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) இன்று மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மல்லூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும், இந்த ரெயில் மல்லூர் - சேலம் இடையே இயக்கப்பட மாட்டாது.

இதேபோல மறுமார்க்கத்தில் இயக்கப்படும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) சேலத்தில் இருந்து இன்று மதியம் 2.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மல்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரை செல்லும். இந்த ரெயில் சேலம் - மல்லூர் இடையே இயக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story