சமரசமற்ற சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசன் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்


சமரசமற்ற சமூகநீதி போராளி இரட்டைமலை சீனிவாசன் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
x

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக‌ தன் வாழ்நாளெல்லாம் போராடினார்.

சென்னை,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சமூகத்தில் பின்தங்கிய‌ மக்களின் விடுதலைக்காக போராடியவர் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன். பத்திரிகையாளரான அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஓயாமல்பாடுபட்டார். கல்விஉரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தார். வட்டமேசை மாநாடு, பூனா ஒப்பந்தம் ஆகியவற்றின் வாயிலாக ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை பெற்று தந்தார்.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவில்,

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும், தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று போராடிய, சமரசமற்ற சமூகநீதி போராளி; "கல்வியே ஒடுக்கப்பட்டவரின் பேராயுதம்" என முழங்கிய புரட்சியாளர், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில், அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story