நெல்லையில் தந்தையை கட்டையால் தாக்கிய மகன் கைது

நெல்லையில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தையை கட்டையால் தாக்கியதோடு, தன்னையும் தாக்கியதாக தாய் போலீசில் புகார் அளித்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், குறிச்சி, அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் தினந்தோறும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (27.04.2025) குடிபோதையில் தகராறு செய்த தனது தந்தை முருகனை மகனான ராஜசெல்வம் (வயது 27) தட்டிக் கேட்டுள்ளார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தையை கட்டையால் தாக்கியதாகவும் தடுக்கச் சென்ற தன்னையும் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த முருகனின் மனைவியான சமுத்திரக்கனி (54) கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜசெல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
Related Tags :
Next Story






