மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம்
Published on

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் வருகிற கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருகிற 25, 27, 29, 31, அடுத்த மாதம்(ஜனவரி) 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை மதியம் 2.25 மணிக்கு சென்றடையும்.

இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 26, 28, 30, அடுத்த மாதம் 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com