சென்னை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

கோப்புப்படம்

மதுரையில் இருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை

தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சென்னை - ராஜஸ்தான்

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் சென்னையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக ராஜஸ்தானில் மாநிலம் பஹத்ஹிகோதியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 30ம் தேதி புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும்.

பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 2- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 16- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள்

மதுரை - ராஜஸ்தான்

மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 28ம் தேதி திங்கட்கிழ்மையில் மதுரையில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக ராஜஸ்தானில் மாநிலம் பஹத்ஹிகோதியில் இருந்து மதுரை ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற மே 01ம் தேதி வியாழக்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும்.

பெட்டி அமைப்பு: 12- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 4- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story