8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது


8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
x

8-ம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருப்பாலத்துறை பகுதியில் வசிப்பவர் முருகேசன் மகன் பாலசுப்பிரமணியன்(வயது 29). இவர், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருந்து பாபநாசத்தில் உள்ள ஆசிரியர் பணிபுரிந்து வந்த பள்ளிக்கு படிக்க வந்த எட்டாம் வகுப்பு மாணவனை பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை தந்துள்ளார்.

இதில் மிரண்டு போன அந்த மாணவன் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான். உடனடியாக மாணவனின் பெற்றோர் இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story