தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்


தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
x

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு 68 பயணிகளுடன் இண்டிகோ விமானம் இன்று காலை புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி மீண்டும் சென்னைக்கு திருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story