50 பெண்களிடம் நகை, பணம் பறித்து உல்லாசம்...கில்லாடி வாலிபரின் லீலைகள்

தன்னை பற்றி விசாரிக்க வருபவர்களை ஏமாறுவதற்காக பென்ஸ், உள்ளிட்ட சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாடகைக்கு எடுத்து தனக்கு சொந்தமானது போல் நடித்து ஏமாற்றினார்.
சென்னை,
திருநெல்வேலியை சேர்ந்தவர் சூர்யா வயது 28. இவர் தான் ஒரு தொழில் அதிபர் என்று தெரிவித்து திருமண தகவல் இணையதளத்தில் மணப்பெண் தேவை என பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்து தொடர்பு கொண்ட ப இளம்பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகினார். மேலும் அவர்களை ஏமாற்றி, நகை, பணம் பறித்து விட்டு உல்லாசமாக ஊர்சுற்றி வந்தார். அவரது திருமண மோசடியில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிக்கினார்.
இது குறித்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல பெண்கள் புகார் தெரிவித்ததால் சிறையில் இருந்த சூர்யாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது சூர்யா திருமண இணையதளம் மூலம் அறிமுகமான சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதும், அவர்களிடம் இருந்து நகை, பணம் பறித்து உல்லாசமாக சுற்றி இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.சூர்யா திருமண இணையதளத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பற்றி விசாரிக்க வருபவர்களை ஏமாறுவதற்காக பென்ஸ், உள்ளிட்ட சொகுசு கார்கள் மற்றும் பங்களாவை வாடகைக்கு எடுத்து தனக்கு சொந்தமானது போல் நடித்து ஏமாற்றினார். இதனை நம்பி திருமணம் ஆசையில் பழகிய பெண்கள் பலரை சூர்யா ஏமாற்றி உல்லாசமாக இருந்ததும், அவர்களிடம் இதேபோல் கார், பங்களா வாங்க வேண்டும் என்றும், இடம் வாங்கி தருவதாகவும் கூறி நகை, பணத்தை பறித்து ஜாலியாக ஊர் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.
சூர்யா சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சம் பறித்து இருப்பது போலீசார் விசாரணையில் ஹெரிய வந்துள்ளது. தொடர்ந்து சூர்யாவிடம் விசாரணை நடந்து வருகிறது.






